தன் காதலியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைக்க முயற்சி செய்த 41 வயது ஆடவருக்கு, சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இரவுவேளை கழிவறையில் நடந்த அந்தச் சம்பவத்தின்போது சிறுமிக்குச் சுமார் 11, 12 வயது. ஆடவர் தனக்கு இழைத்தது தவறு என்பதை அப்போது சிறுமி உணரவில்லை.
ஆடவரும் பாதிக்கப்பட்டவரின் தாயாரும் 2004ஆம் ஆண்டு முதல் காதலர்களாக இருந்ததை அடுத்து, 2015ல் அவர்கள் மணந்துகொண்டனர். அவ்விருவருக்கும் 11 முதல் 19 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
திருமணத்தின் மூலம் சிறுமி ஆடவருக்கு மாற்றான் மகள் ஆனார்.
சிறுமி 14 வயது இருந்த சமயம், கட்டில் மீதிருந்தவாறு தன்னுடைய இளம் மாற்றான் சகோதரர்களுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது ஆடவர் சிறுமியை மானபங்கம் செய்தார்.
தற்போது 26 வயதுடைய அந்த மாற்றான் மகளின் பாதுகாப்பு கருதி ஆடவரின் அடையாளம் வெளியிடப்படுவதற்குத் தடை உத்தரவு உள்ளது.
இந்நிலையில், ஆடவருக்கு மே 29ஆம் தேதி ஆறு ஆண்டுகள், ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் எட்டு பிரம்படிகளும் ஆடவருக்கு விதிக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பாலியல் வன்கொடுமை இழைக்க முயன்றது, மானபங்கம் செய்தது தொடர்பான குற்றங்களை ஆடவர் ஒப்புக்கொண்டார்.