சிறுமியிடம் பாலியல் சேவை நாடிய ஆடவருக்குச் சிறை

சிறுமியிடம் பாலியல் சேவை நாடிய ஆடவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Oct 2026 - 7:39 pm

1 mins read

பதின்ம வயதுப் பெண்ணிடம் அவரது வயதை உறுதிசெய்யாமல் பாலியல் சேவையை நாடிய ஆடவருக்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

முகம்மது அய்சாட் காலிஸ் டாவுட் என்ற 38 வயது ஆடவர் $150 கொடுத்து அந்த சிறுமியுடன் பாலியல் உறவுகொள்ள முயன்றார். தமக்கு அப்போது 21 வயது எனக் கூறி, பாலியல் உறவில் ஈடுபட்ட அந்தப் பெண்ணுக்கு உண்மையில் வயது 16.

அப்பெண்ணின் உண்மை வயதை தெளிவாக உறுதிசெய்ய ஆடவர் தவறிவிட்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) ஆடவர் ஒப்புக்கொண்டார்.

அதே குற்றத்தை முதலில் செய்த ஷியாரிஹுல் டாவுட் அப்துல் ரசாக் என்ற 26 வயது ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை செப்டம்பர் மாதத்தில் விதிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் பாலியல் சேவையை நாடிய குற்றத்தைப் புரிந்த எட்டு ஆடவர்களில் இந்த இருவரும் அடங்குவர். அவர்கள் அனைவர்மீதும் ஆகஸ்ட் மாதத்தில் குற்றஞ்சுமத்தப்பட்டது.

எஞ்சியுள்ள அறுவர்மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்