$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடியவருக்கு சிறை

$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடியவருக்கு சிறை

1 mins read
2db3cb7d-c57a-4fd5-a1c7-ba2ce6d0e2be
தன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை லு ஜிங்னான் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

அடகுக் கடையில் $132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைத் திருடிய மூன்று சீனர்களில் ஒருவரான 49 வயது லு ஜிங்னானுக்கு இரண்டு ஆண்டுகள், எட்டு மாத சிறைத் தண்டனை வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்தை லு, இவ்வாண்டு ஜூலை 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலையில் இருக்கும் ஓர் அடகுக் கடையில் 59 வயது ஹி யுவான்லின், 50 வயது லுவோ யி ஆகிய இருவருடன் இணைந்து புரிந்ததாகக் கூறப்பட்டது

தன்மீது சுமத்தப்பட்ட திருட்டுக் குற்றச்சாட்டை லு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய மற்ற இரு குற்றவாளிகளான ஹி, லுவோ ஆகியோரின் வழக்குகளுக்கான தீர்ப்பு குறித்து நீதிமன்ற ஆவணங்களில் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்