வாயில் மெல்லும் புகையிலையைச் சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற மலேசியருக்குத் திங்கட்கிழமையன்று (ஜனவரி 5) ஏழு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உணவு விநியோக ஊழியரான 24 வயது முகம்மது அமிருல் ஹக்கிமி ஸைனால், 100 கிலோவுக்கும் அதிகமான புகையிலையைச் சிங்கப்பூருக்குக் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்குள் வாடகை கார் ஒன்றை ஓட்டிச் செல்லுமாறு 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதியன்று அமிருலிடம் அவரது நண்பர் அமான் கேட்டுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த காரில், வாயில் மெல்லக்கூடிய பொருள்கள் இருப்பதாக அமிருலிடம் அமான் கூறியதாக அறியப்படுகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7.20 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் அமிருல் பிடிபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இவ்வகைப் புகையிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குச் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமிருல் சம்பவ நாளன்றே கைது செய்யப்பட்டார்.
அவர் மீது டிசம்பர் 3ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அமிருல் சிங்கப்பூருக்குள் நுழைந்ததும் பிடோக்கிற்கு காரை ஓட்டிச் செல்ல இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

