தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூன் லே வீட்டில் மாண்ட ஆடவர்; சகோதரர்மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

1 mins read
0eda019c-eff0-459c-9b18-50a63b13528f
மாண்ட ஆடவரின் உடலைக் காவல்துறை அகற்றியது. - படம்: ஷின் மின் நாளிதழ்

பூன் லேயில் இருக்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் 57 வயது அப்துல் ரஹமான் முகமது அர்ஃபின் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) இறந்துகிடந்தார்.

புளோக் 187 பூன் லே அவென்யூவில் நடந்த இச்சம்பவத்தில் மாண்டவரின் சகோதரரான 58 வயது அப்துல் ராணி முகமது அர்ஃபின்னுக்குத் தொடர்பிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரைக் கைது செய்தது.

அப்துல் ராணிமீது வியாழக்கிழமை (மார்ச் 13) கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர் காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகச் சாங்கி மருத்துவ வளாகத்தில் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்குமாறு அரசுத்தரப்பு நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.

மேலும், குற்றச்சாட்டப்பட்டவருக்கு மனநலப் பரிசோதனை செய்வதற்காக மனநலக் கழகத்திற்கு அழைத்துசெல்லவும் அனுமதி வழங்கும்படி அரசுத்தரப்பு கோரியுள்ளது.

தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்டதற்கு, எதுவும் இல்லை என அப்துல் ராணி பதிலளித்தார்.

அவரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி அனுமதி வழங்கியதுடன் இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்