$707,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; சிங்கப்பூரர் கைது

1 mins read
72b1d167-ab00-432d-a256-53c972d605f5
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81க்கு அருகில் போதை ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையில் $707,000க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது. - படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் $707,000க்கும் அதிகமான பெறுமானமுள்ள போதைப்பொருள்களைச் சனிக்கிழமையன்று (மே 18) பறிமுதல் செய்தனர். அதன் தொடர்பில், 32 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் கிட்டத்தட்ட 5.8 கிலோ கஞ்சா, 1,582 கிராம் “ஐஸ்” அல்லது மெத்தபெட்டமைன் உள்ளிட்டவை அடங்கும்.

அவை, கிட்டத்தட்ட 1,730 போதைப் புழங்கிகள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தப் போதுமானவை என்று திங்கள்கிழமை (மே 21) மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ஐ சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியின் தரை தளத்தில் அந்த சிங்கப்பூரரை, மே 18ஆம் தேதி போதை ஒழிப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டதில் கிட்டத்தட்ட 135 கிராம் எக்ஸ்டசி, 756 கிராம் கஞ்சா, 1,065 கிராம் ஐஸ், 365 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த ஆடவர் வாடகைக்கு எடுத்திருந்த காருக்கு அருகில் உள்ள கார் நிறுத்துமிடத்திற்கு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்து 5,052 கிராம் கஞ்சா, கிட்டத்தட்ட 517 கிராம் ஐஸ் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்