கடந்த 2021ஆம் ஆண்டில் 15 வயது மாணவர் ஒருவரின் உயிரிழப்பு தொடர்பில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஆடவர் ஒருவர் அடுத்த மாதம் ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.
ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளையாட்டு நிலையத்தில் 2021 பிப்ரவரி 3ஆம் தேதியன்று புவா சின் யாங் ஜெத்ரோ என்ற மாணவர் மரணமடைந்தது தொடர்பில் ஒரு குற்றச்சாட்டை முகம்மது நூருல் ஹக்கீம் முகம்மது டின், 23, எதிர்நோக்குகிறார்.
பள்ளி முகாமில் கயிற்றில் நடக்கும் சாகச நடவடிக்கையின்போது உயரத்திலிருந்து கீழே விழுந்ததைத் தொடர்ந்து, அம்மாணவரின் உடலுறுப்புகள் செயலிழந்தன.
ஜெத்ரோவைச் சாகச நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு முன்னர் அவரின் கால்களில் இருந்த வார்கள் சரியாகப் பொருத்தப்பட்டனவா என்பதை உறுதிசெய்யத் தவறியதால் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக ஹக்கீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹக்கீம் ‘கெனொப்பி ஸ்கைவாக் ரோப்’ பயிற்சித் தளத்தில் பயிற்சி அதிகாரியாக இருந்தார்.
கழுத்து இறுக்கப்பட்டதையடுத்து, பல உடலுறுப்புகள் செயலிழந்து ஜெத்ரோ உயிரிழந்தார்.

