முன்னாள் மனைவி செலுத்திய முத்திரை வரியை திருப்பிக் கேட்கும் ஆடவர்

முன்னாள் மனைவி செலுத்திய முத்திரை வரியை திருப்பிக் கேட்கும் ஆடவர்

2 mins read
b6e09bec-0dd5-47c1-a820-415408531e36
ஆடவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இரண்டாவது சொத்தை வாங்குவதற்காகச் செலுத்தப்பட்ட 300,000 வெள்ளி முத்திரை வரியை முன்னாள் மனைவியிடமிருந்து திரும்பப் பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியில் ஆடவர் தோல்வி அடைந்துள்ளார்.

தன்னிடம் ஆலோசனைக் கேட்டிருந்தால் கூடுதலாகச் செலுத்தப்பட்ட 206,000 வெள்ளியை சேமித்திருக்கலாம் என்பது அவரது வாதம்.

முதலில் வாங்கிய முதல் சொத்து மனைவியின் பெயரில் இருந்தது. இருவரும் ஒரே வீட்டில் வசித்தனர். மனைவியின் நோக்கம் பற்றி முன்பே தெரிந்திருந்தால் வீட்டின் உரிமையை தமது பெயருக்கு மாற்றக் கேட்டிருப்பேன் என்று ஆடவர் கூறியுள்ளார்.

வீட்டின் உரிமையை மாற்றியிருந்தால் அவரது மனைவி முதல் முறையாக வீடு வாங்கும் சிங்கப்பூர்வாசி என்ற முறையில் 2வது சொத்துக்குக் கூடுதல் முத்திரை வரியைச் செலுத்த வேண்டியிருக்காது.

ஆனால் ஆடவரின் ஊகங்கள் அடிப்படையிலானவை என்ற நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

அந்தச் சமயத்தில் அந்தத் தம்பதியர் மணவிலக்குப் பெற விரும்பினர். மனைவி இரண்டாவது சொத்தை வாங்க கணவர் ஆட்சேபணைத் தெரிவித்திருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது.

முதலீட்டு பகுப்பாய்வாளரான 52 வயது சிங்கப்பூர் நிரந்தவாசியான அந்த ஆடவர், மில்லியன்கணக்கில் பணத்தைச் சேர்த்த பிறகு 40 வயதில் ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த நிலையில், அவர் சொத்து வாங்க விரும்பியிருந்தால் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஒரு மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி, மாதம் $25,000 சம்பாதிக்கும் 50 வயதான மனைவி, வீட்டில் நிலைமை மோசமடைந்ததால் இரண்டாவது சொத்து வாங்கியதை ஒப்புக் கொண்டார். விவாகரத்துக்கு விண்ணப்பிக்க எண்ணியிருந்ததால் 3.5 மில்லியன் மதிப்பிலான இரண்டாவது சொத்தை கணவருக்குத் தெரியாமல் வாங்க அடைமானத்துக்கு விண்ணப்பித்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்