ஆயர் ராஜா விரைவுச்சாலையின் நடுவே, ஆடவர் ஒருவர் மே 25ஆம் தேதி உட்கார்ந்திருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று ‘எஸ்ஜி ரோடு விஜிலான்டே’ தளத்தில் பகிரப்பட்டது.
அவர் உட்கார்ந்திருந்த இடம், கார்கள் விரைவுச்சாலையுடன் இணையும் சாலைப் பகுதியாகும். அவருக்கு மிக அருகில் வாகனங்கள் செல்வதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.
இரண்டு ‘கேன்’ பானம் வைத்திருந்ததுடன் அந்த ஆடவர் தன் கைப்பேசியில் ஏதோ பார்த்துக்கொண்டும் இருந்தார். அவர் அருந்துவது மதுபானமா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ஆடவர் தன் தலையைச் சொறிந்தபடி கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணராதது போல் இருந்தது.
இதையடுத்து ஆடவரின் மனநலம் குறித்து இணையவாசிகள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

