தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணனை வெட்டியதை ஒப்புக்கொண்ட தம்பி

2 mins read
5cbce899-c690-4c05-98cc-409362be1bec
படம்: - பிக்சாபே

தனது அண்ணனின் நடத்தையால் எரிச்சலடைந்த 27 வயது டேனியல் ஃபோக் மிங் சாய், அவரின் 32 வயது சகோதரனை வலது கை, மார்பு, வலது கால் ஆகிய பகுதிகளில் கத்தியால் வெட்டினார்.

அதனால், பாதிக்கப்பட்ட அந்த 32 வயது சகோதரருக்குப் பல்வேறு இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. மேலும், அவரது முன்கை, கட்டைவிரல் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நரம்புகளில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இவை, பாதிக்கப்பட்டவருக்கு அப்பகுதிகளில் நிரந்தர உணர்வின்மையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.

ஆபத்தான ஆயுதம் கொண்டு ஒருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டை ஃபோக், செப்டம்பர் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அவருக்குத் தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற இரு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2000ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு, ஃபோக் தனது தாயுடன் ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்ததாகவும் அதே நேரத்தில் அவரது சகோதரர் தந்தையுடன் வசித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

ஃபோக்கின் தாய் தனது கடையில் வசிப்பதற்காக 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது குடியிருப்பை விட்டு வெளியேறியதால், ஃபோக் தனது தந்தையின் வசிப்பிடத்திற்குச் சென்றார்.

2023ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, ஃபோக்கின் பல் துலக்கியில் தான் பயன்படுத்திய பல்லிடுக்கு நூலை அவரது சகோதரர் விட்டுசென்றதாகக் கூறப்பட்டது.

இதனால் , இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சண்டை முற்றிய நிலையில், ஆத்திரத்தில் தனது சகோதரனின் படுக்கை அறைக் கதவுக்குத் தீ மூட்டியதுடன் 16 சென்டிமீட்டர் நீளம் உடைய கத்தியைக் கொண்டு ஃபோக், தனது அவரை வெட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்திற்காக ஃபோக்கிற்குச் செப்டம்பர் 19ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்