தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரும் இரண்டு லாரிகளும் மோதி விபத்து

1 mins read
6ce56342-273e-45ee-b456-07cc1a23c582
விபத்துக்குள்ளான லாரி ஒன்றிலிருந்த முட்டைகள் சாலையில் சிதறிக் கிடப்பதைப் படத்தில் காண முடிகிறது. - படம்: ஷின்மின் நாளிதழ்

செம்பவாங் சாலையை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் சாலையில் ஒரு காரும் இரண்டு லாரிகளும் மோதிக் கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் காயமடைந்தார்.

செவ்வாய்க்கிழமை (நவ. 14) காலை நடந்த இந்தச் சம்பவம் குறித்து காலை 7 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

காரை ஓட்டிய 41 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சுயநினைவோடு இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான இரண்டு லாரிகளில் ஒன்றை ஓட்டிவந்த 54 வயது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.

விபத்து நடந்த இடத்திலேயே சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் அவரைப் பரிசோதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி அதிக சேதமடைந்ததாகவும் காருக்குள் இருந்த அனைத்து காற்றுப் பைகளும் விரிவடைந்த நிலையில் இருந்ததாகவும் சீன மொழி நாளிதழான லியான்ஹ சாவ் பாவ் குறிப்பிட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்