உலகளாவிய இணையக் குற்றக் கும்பலுடன் தொடர்புடைய ஆடவரைக் குற்றவாளி என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென்கொரியச் சூதாட்ட இணையப்பக்கங்களுடன் பதிவு செய்தவர்களின் தனிப்பட்ட தரவுகளை இந்தக் கும்பல் திருடியது.
திருடப்பட்ட விவரங்களைக் கொண்டு இணையம் வழி சூதாட்டத்தை அக்கும்பல் மேம்படுத்தியது.
பிறரது தனிப்பட்ட விவரங்களை அவர்களது அனுமதி இன்றி பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்தை சீன நாட்டவரான சாங் சிங்சியாவ் செப்டம்பர் 26ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.
இணையம் வழி விளையாட்டு இணையத்தளங்களில் காணப்படும் பல இந்திய நாட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை வாங்கவும் அவர் முற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியன்று கேர்ன்ஹில் சாலையில் உள்ள தமது வீட்டில் 39 வயது சாங் கைது செய்யப்பட்டார்.
பல வீடுகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றப் புலன்விசாரணைப் பிரிவை, காலவ்துறையின் உளவியல் பிரிவு, சிறப்பு செயல்பாட்டுத் தளபத்தியம், உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 160க்கும் அதிகமான அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
சாங்கின் வீட்டிலிருந்து இரண்டு ஐஃபோன்கள், $465,000 ரொக்கம், நான்கு விரலிகள், ஒரு ஆப்பிள் கைக்கடிகாரம், ஒரு வன்பொருள் மின்நாணயப் பணப்பை ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிரடிச் சோதனையில் ஆறு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

