114 கி.மீ. வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுபவர்

114 கி.மீ. வேகத்தில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படுபவர்

1 mins read
விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் சிறார் இருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது
3401793d-41c7-48b9-aaf7-2ae19ca4c14d
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

ஆடவர் ஒருவர் காரை சாலைப் போக்குவரத்துக்கு எதிராக மணிக்கு 114 கிலோமீட்டர் வரை வேகமாக ஓட்டி பேருந்து, சாலை விளக்குக் கம்பம் ஆகியவற்றின்மீது மோதியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்தக் காரில் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் இருந்த சிறாரில் இருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.

‘பிரெத்தலைசர்’ சோதனைக்கு மறுப்பு

சந்தேக நபரான ஏரன் டான் யாவ் சோங், தான் கைது செய்யப்பட்டபோது ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாரா என்பதைக் கண்டறிவதற்கான ‘பிரெத்தலைசர்’ சோதனையை மேற்கொள்ள மறுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் 100 மில்லிலிட்டர் ரத்தத்தில் கிட்டத்தட்ட 148 மில்லிகிராம் மதுபானம் கலந்திருந்தது பின்னர் தெரியவந்தது.

100 மில்லிலிட்டர் ரத்தத்தில் 80 மில்லிகிராமுக்கு மேல் மதுபானம் கலந்திருக்கக்கூடாது என்பது விதிமுறை. 29 வயது டான் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டில் மதுபானம் அருந்திவிட்டு கவனமின்றி வாகனம் ஓட்டியதாக நிரூபிக்கப்பட்டவர்.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

அவர்மீது வியாழக்கிழமை (ஜூன் 18) மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியது, அபாயகரமாக ஓட்டி பிறருக்குக் காயம் ஏற்படுத்தியது, பிறருக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் காரை நிறுத்தியது, மதுபோதைச் சோதனையை மேற்கொள்ள மறுத்தது, சாலைப் போக்குவரத்தை எதிர்த்து வாகனம் ஓட்டியது ஆகியவற்றின் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் டான்மீது சுமத்தப்பட்டன.

வரும் ஜூலை மாதம் 16ஆம் தேதி டான் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

சம்பவம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி புக்கிட் தீமா பகுதியில் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்