15 நிமிடங்களில் மூன்று பெண்களை மானபங்கம் செய்ததாக ஆடவர்மீது சந்தேகம்

1 mins read
c1b6d597-8e4f-486b-9b6d-c671b6639481
படம்: - பிக்சாபே

ஆர்ச்சட் ரோட்டில் மூன்று பெண்களை 15 நிமிடங்களில் மானபங்கம் செய்துவிட்டு நான்காவது பெண்ணை நெருங்கியதாக சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.

மானபங்கம் செய்ததாக சந்தேகிக்கப்படும் 48 வயது ஆடவரின் பெயர் ஜோசப் மார்க் மெர்வின்.

அவர்மீது மானபங்கம் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக மற்றொரு நபரை அணுகிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்ச்சர்ட் ரோட்டில் இருக்கும் லக்கி பிளாசாவிலும் அதற்கு அருகேயும் நடந்ததாக கூறப்பட்டது.

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி ஜோசப் தன் குற்றத்தை ஒப்புகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மானபங்கம் குற்றச்சாட்டுக்கும் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இத்தண்டனைகள் சேர்த்தும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்