காமன்வெல்த்தில் எண்மரை வெட்டுக்கத்தியால் தாக்கியவருக்கு ஈராண்டுச் சிறை

1 mins read
11028025-d6cf-44a5-8c0e-52c97b38509e
ஆடவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கத்தியும் வெட்டுக்கத்தியும் 2024 பிப்ரவரி 4ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது பார்வைக்கு வைக்கப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காமன்வெல்த்தில் கத்தியாலும் வெட்டுக்கத்தியாலும் பலரைத் தாக்கிய இளையருக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) ஈராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசஃப் லாவ் ஜின் ஹுவா, 22, என்ற அந்த ஆடவர் வேண்டுமென்றே அபாயகரமான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளையும் ஆயுதம் வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டையும் முன்னதாக ஒப்புக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்படுமுன் அவர்மீதான மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

2024 பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 6.45 மணிக்கும் 7.15 மணிக்கும் இடையில் காமன்வெல்த் அவென்யூவில் ஒரு வெட்டுக்கத்தியையும் ஒரு கத்தியையும் கொண்டு எட்டுப் பேரை லாவ் தாக்கியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

லாவ்வின் தண்டனைக்காலம் 2024 பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து கணக்கில் கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்