கம்போடியாவில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட நிறுவனத்திற்கு நிதி அனுப்ப, சிங்கப்பூருக்குள் பணம் கொண்டு வந்ததாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவைச் சேர்ந்த 35 வயதான டேவிட் ஹெர்மான்டோ பிப்ரவரி 17ஆம் தேதி தானா மேரா படகு முனையத்தில் 26,800 வெள்ளியுடன் சிக்கினார்.
டேவிட் தாம் கொண்டு வந்த பணத்தை கம்போடியாவில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட நிறுவனத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.
அவர் அனுப்பவிருந்த நிதி சூதாட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு உதவுவதற்கு என்று விசாரணையில் தெரியவந்தது.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, வெளிநாட்டில் இருந்து 20,000 வெள்ளிக்கு மேல் பணம் எடுத்து வருவதை அதிகாரிகளிடம் அறிவிக்காதது என டேவிட்மீது வியாழக்கிழமை (பிப்ரவரி 27) குற்றஞ்சாட்டப்பட்டது.
டேவிட் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மார்ச் 27ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

