உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியவர் கைது

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியவர் கைது

1 mins read
d9a320ba-2a5e-4222-bf63-844094db7e75
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் குறுக்குச்சாலைக்கு முன்னர் நிகழ்ந்த விபத்தில் மூன்று வாகனங்கள் மோதின. - படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே, ஃபேஸ்புக்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே கடந்த வாரம் விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச்சென்ற 30 வயது கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுமையான காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக அந்த ஆடவர் திங்கட்கிழமை (மே 4) கைது செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் காவல்துறை தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உட்லண்ட்ஸ் குறுக்குச்சாலைக்கு முன்னர் ஏப்ரல் 26ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் ஏற்பட்ட விபத்துத் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார்.

இரண்டு கார்களும் ஒரு மோட்டார்சைக்கிளும் மோதிய அந்த விபத்தில் 32 வயது மோட்டார்சைக்கிளோட்டி காயமடைந்தார். அவரை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

விரைவுச்சாலையின் முதல் தடத்தில் சென்றுகொண்டிருந்த வெள்ளை கார் ஒன்றுடன் கறுப்பு கார் மோதிய பின்னர் இரு கார்களும் நின்றுவிட்டதையும் காரில் இருந்த கேமரா பதிவு செய்திருந்தது.

வெள்ளை காரிலிருந்து ஓட்டுநர் இறங்குவதற்குள் கறுப்பு கார் பின்னோக்கிச் சென்று இரண்டாவது தடத்தில் தப்பிச்செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் ஒன்றுடன் அது மோதியது. மேலும் இரு வாகனங்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின.

அந்தச் சம்பவங்களுக்குப் பின்னர், கறுப்பு கார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

குறிப்புச் சொற்கள்
கார்விபத்துஉட்லண்ட்ஸ்