சிறார் ஆபாசக் காணொளி வைத்திருந்த ஆடவருக்குச் சிறை

சிறார் ஆபாசக் காணொளி வைத்திருந்த ஆடவருக்குச் சிறை

1 mins read
81efdb86-af28-494d-8e55-d22dda2c77db
டுவிட்டர் கணக்கில் ஆபாசப் படங்கள் இருந்ததாகவும் 816 ஆபாசக் காணொளிகளை கைரி விற்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. படம்: பிக்ஸாபே -

முகமது கைரி அரிஃபின் எனும் 30 வயது ஆடவருக்கு நேற்று ஆறு மாதங்கள் ஆறு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

அவரது டுவிட்டர் கணக்கில் ஆபாசப் படங்கள் இருந்ததாகவும் 816 ஆபாசக் காணொளிகளை அவர் விற்க முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்செயலாக இதுகுறித்துத் தெரியவந்த கைரியின் மேலாளர் காவல்துறையிடம் புகாரளித்தார்.

கைரியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், 203 சிறார் ஆபாசக் காணொளிகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். பிணையில் வெளிவந்துள்ள கைரி மே 2ஆம் தேதி தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.