குடிபோதையில் இருந்த நண்பரின் நடத்தைப் பிடிக்காததால் அவரது முகத்தில் ஆடவர் குத்தினார்.
பின்பக்கமாக சாய்ந்த நண்பரின் தலை காங்ரீட் தரையில் மோதியது. நண்பருக்கு அந்த ஆடவர் உதவி செய்யாமல் வேறு ஒரு இடத்தில் இருந்த நண்பர்களுடன் குடிக்கச் சென்றுவிட்டார்.
நான்கு நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் நண்பர் உயிரிழந்தார்.
அக்டோபர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையான எங் சீ ஹோங், 55, வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மற்றொரு சம்பவத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தையும் அவர் ஒப்புக் கொண்டார்.
அரசுத் தரப்பு துணை வழக்கறிஞரான டியோ லு ஜியா, கண்காணிப்புக் கேமராவில் எங்கின் செயல் பதிவாகியிருந்ததை சுட்டிக்காட்டினார்.
கடந்த இருபது ஆண்டுகளில் இதே போன்று ஆறு சம்பவங்களில் அவர் மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் வழக்கறிஞர் டியோ கூறினார்.
அக்டோபர் 10ஆம் தேதி எங்குக்கு தண்டனை விதிக்கப்படவிருக்கிறது.


