தோழியைப் பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது ஆடவருக்கு 18 ஆண்டுகள் 11 மாதங்கள் 3 வாரச் சிறைத் தண்டனையும் 16 பிரம்படிகளும் வியாழக் கிழமை விதிக்கப்பட்டது.
அவர் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளையும், ஒரு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சிறைத்தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்டிருந்த மற்ற நான்கு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர் இந்தக் குற்றத்தை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதிக்கும் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்தார் எனக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக அந்த ஆடவர் குறித்த தகவல்கள் காக் வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட அந்த மாதின் வயது இப்போது 25.
அந்த ஆடவர், தோழியின் வீட்டில் பேய் இருப்பதாகக் கூறினார்.
தோழியையும் அவருடைய சகோதரியையும் பேயிடமிருந்து பாதுகாக்க சில சடங்குகள் செய்ய வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் கோயிலில் சிறிதுகாலம் தொண்டு செய்ததாகவும் அதனால் அவரால் சடங்குகள் செய்ய முடியும் எனவும் தன் தோழியிடம் கூறினார்.
அதை நம்பிய அவர்கள் சடங்குகள் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி பாலியலில் ஈடுபடுவது சடங்கின் ஒரு பகுதி எனக் கூறி தன் தோழியை அந்த ஆடவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது குறித்து அந்த மாது அதே ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

