தம் மூன்று மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, நான்காவது மகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்திய தந்தைக்கு விதிக்கப்பட்ட 24 பிரம்படிகளை அவரால் தாங்கிக்கொள்ள இயலாது என்பதால் அவருக்குக் கூடுதலாக 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு முன்னர் விதிக்கப்பட்ட 33 ஆண்டுகள், இரண்டு மாதச் சிறைத் தண்டனையுடன் சேர்த்து இந்தத் தண்டனையையும் அவர் அனுபவிக்க வேண்டும் என திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டது.
45 வயதான அவருக்கு இதயச் செயலிழப்புப் பிரச்சினை இருப்பதால் பிரம்படிகளைத் தாங்குமளவுக்கு அவரது உடல்நலம் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் நீதிமன்றம் பிரம்படிக்குப் பதிலாக கூடுதலாக 10 மாதச் சிறைத்தண்டனை விதித்தது.