வாடகைக்குக் குடியிருந்த காலகட்டத்தில், தம்முடைய வீட்டு உரிமையாளரையும் அவருடைய சிறுவயது மகளையும் பல்வேறுமுறை படம்பிடித்த ஆடவருக்கு 19 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த மலேசிய ஆடவரிடம் 2018ஆம் ஆண்டு முதல் வீட்டு உரிமையாளரை வைத்து எடுத்த காணொளிகளும் காணொளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காணொளிகளில் இருந்து 74 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
அந்த 40 வயது ஆடவர் மீது ரகசியமாகப் காணொளிகள், படமெடுத்த இரண்டு குற்றச்சாட்டுகளுடன் பெண்ணை மானபங்கப்படுத்திய ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
இவை தவிர தண்டனை விதிக்கப்படுமுன் மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை மறைக்க ஆடவரின் பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அந்த ஆடவர், அந்த மாது, அவர் கணவர், மகளுடன் தங்கியிருந்த ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் ஓர் அறையை அந்த ஆடவர் 10 ஆண்டுக்காலம் வாடகைக்கு எடுத்திருந்தார் என துணை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.