சிங்கப்பூரில் 18 வயது ஆடவர் ஒருவர் தமது அண்டை வீட்டுக்காரரின் பூனையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இந்தத் துன்புறுத்தல் சம்பவம் அருகில் உள்ள கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அக்காணொளியைப் பலரும் கண்டனர்.
ஆடவரின் துன்புறுத்தலால் பூனைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
தம் மீதான குற்றத்தை அந்த இளையர் ஒப்புக்கொண்டார்.
அந்த இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி, நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்க ஏதுவானவரா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அவருக்கு ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த இளையர், மனநலம் குன்றிய 19 வயது ஆடவரையும் துன்புறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது 20 வயது ஆகும் அந்தக் குற்றவாளி தனது 18 வயதில் துன்புறுத்தல் குற்றங்களைச் செய்ததால் அவரின் பெயரை நீதிமன்றம் வெளியிடவில்லை.
பொதுவாக இளம் குற்றவாளிகளுக்குக் கடுமையான சீர்திருத்தப் பயிற்சி, நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிப்பது வழக்கம்.
அத்துடன், அவர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்படும்.

