தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பிதழ் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியவர் கைது

1 mins read
f1214c5d-b694-41e3-b2a8-fe4ad60877ef
மூன்று ஆண்டு 14 வாரச் சிறைத்தண்டனை - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கத்தியால் மற்றோர் ஆடவரைக் காயப்படுத்திய ஒருவருக்கு செல்லுபடியான கடப்பிதழ் இல்லாத பட்சத்தில் அவர் 2022ன் பிற்பகுதியில் சிங்கப்பூரைவிட்டுச் சட்டவிரோதமாக வெளியேறினார்.

சிங்கப்பூரரான முகம்மது சப்ரி ரிஃபாய் ஸுல்,  மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றின் பிற்பகுதியில் ஏறி, சரக்குப்பொருள்கள் கொண்டுள்ள கூடைகளுக்கு இடையே ஒளிந்தார். அந்த லாரி, ஜோகூர் பாலத்தைக் கடந்து மலேசியா புகுந்தது.

அக்டோபர் 2024ல் சப்ரியை மலேசிய அதிகாரிகள் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பியதாகவும் இங்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் வழக்கறிஞர் கெல்வின் டியோ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதிகாரிகளிடம் கடப்பிதழ்  காட்டாதிருந்தது, வன்முறையிலும் போதைப்பொருள் குற்றங்களிலும் ஈடுபட்டது ஆகியவற்றின் தொடர்பில் ஆகஸ்ட் 11ல் அவருக்கு மூன்று ஆண்டு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

31 வயது சப்ரி, பலமுறை போதைப்பொருள் குற்றங்களைப் புரிந்திருப்பதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. போதைப்பொருள்கள் சிலவற்றை உட்கொண்டதற்காக டிசம்பர் 2020ல் போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் ஓராண்டு தங்கும்படி  அவருக்கு உத்தரவிடப்பட்டது. 

மேற்பார்வை உத்தரவின்படி சிறுநீர்ச் சோதனையை 2022 நவம்பரில் செய்யவேண்டிய அவர், இறுதியில் அவ்வாறு செய்யவில்லை. அதே மாதத்தில் சிராங்கூன் ரோட்டிலுள்ள உணவகம் ஒன்றில் மற்றோர் ஆடவரை சப்ரி கத்தியால் காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்