தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலத்த காற்று, அடைமழை, சரிந்த மரங்கள்

1 mins read
1f5c6969-09f5-4973-8132-513595ebd490
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) மாலை சிங்கப்பூரின் பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பலத்த காற்று, கனமழையினால் செவ்வாய்க்கிழமை மாலை (செப்டம்பர் 17) சிங்கப்பூரின் பல இடங்களிலும் மரங்கள் விழுந்ததாகச் சமூக ஊடகத் தளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஃபேபர் மலைக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர், குன்றின் மேலே ஓடிக்கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதாகவும் கிளைகள் ஒடிந்து விழத் தொடங்கியதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“அடுத்த கணம் என் எதிரே இருந்த மரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது,” என்ற அவர், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து மரம் விழுந்ததை இப்போதுதான் முதன்முறையாகத் தான் கண்டதாகக் கூறினார்.

“அந்த பாதை ஒருவழிச் சாலை. எனவே, அனைத்து வாகனங்களுடன் நானும் அதே பாதையில், திரும்பி அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது,” என்றார் அவர்.

தீவு விரைவுச்சாலையின் புக்கிட் தீமா விரைவுச்சாலை வெளியேற்றத்துக்கு முந்திய பகுதி, பீச் ரோடு, ஸீலின் அவென்யூ, ஜாலான் மெம்பினா உள்ளிட்ட சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்த புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தின் பிற்பாதியில், அடுத்த 15 நாள்களுக்கு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று செப்டம்பர் 16ஆம் தேதி, சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்தது. சில நாள்களில் இடியுடன் கூடிய மழை பரவலாகவும் கனமாகவும் பெய்யக்கூடும் என்றும் கூறியது.

அப்பர் ஹொக்கியன் சாலையில் கார், வேன் மீது விழுந்திருந்திருக்கும் மரம்.
அப்பர் ஹொக்கியன் சாலையில் கார், வேன் மீது விழுந்திருந்திருக்கும் மரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்