மரினா பே பகுதியில் உடற்குறையுள்ள கலைஞர்களின் வெளிப்பாடு

1 mins read
8f919d06-93e5-4b57-af74-f8685b809ee2
சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளையும் 2025ஆம் ஆண்டையும் கொண்டாட தீவு முழுதும் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி இந்த இசை, ஒளிக் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விண்மீன் திரள், பட்டாம்பூச்சிகள், பறவைகள் அடங்கிய காட்சிகள், வரும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31 வரை ‘த ஃபுல்லர்டன் ஹோட்டலின்’ முகப்புப் பகுதியை மிளிரவைக்கவுள்ள கலைப் படைப்புகளில் சில.

‘ART:DIS’ எனும் உள்ளூர் லாப நோக்கமற்ற அமைப்பைச் சேர்ந்த உடற்குறையுள்ள கலைஞர்கள் இந்தப் படைப்புகளைத் தயாரித்தனர்.

சமூகப் பங்காளியும் உள்ளுர் கொடை அமைப்புமான ‘த மஜூரிட்டி டிரஸ்ட்’உடன் இணைந்து அந்தப் படைப்புகள் வெளிகாட்டப்பட்டன.

அந்த இசை, ஒளிக் காட்சி, 2025ஆம் ஆண்டை வரவேற்கும் ‘மரினா பே சிங்கப்பூர் கவுன்ட்டவுன்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகும்.

வண்ணமயமான அந்தப் படைப்புகள் இரவு 8 மணி முதல் இரவு 10.30 மணிவரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் காண்பிக்கப்படும். டிசம்பர் 31ஆம் தேதி மட்டும், கடைசிக் காட்சி இரவு 10.45 மணிக்குக் காண்பிக்கப்படும். ஒவ்வொரு காட்சியும் 6 நிமிடங்கள் நீடிக்கும்.

இவ்வாண்டின் கருப்பொருள் ‘திரைவிங்’ என்பதாகும். சிங்கப்பூரில் பின்னணி, சூழல் ஆகியவற்றைத் தாண்டி தழைத்தோங்கி இருப்பது குறித்து சிந்தித்துப் பார்க்க, சமூகத்தை ஊக்குவிப்பதே அதன் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்