தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரினா பே சேண்ட்ஸ் வருமானம் 83% அதிகரிப்பு

1 mins read
8328c1de-917d-475f-9b89-ca9919a2810d
வட்டி, வரிகள் போன்றவற்றை சேர்க்காமல் மரினா பே சேண்ட்சின் வருமானம் 743 மில்லியன் அமெரிக்க டாலராகப் (S$965 மில்லியன்) பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரினா பே சேண்ட்சின் வருமானம், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 83 விழுக்காடு உயர்ந்தது.

வட்டி, வரிகள் போன்றவற்றை சேர்க்காமல் அதன் வருமானம் 743 மில்லியன் அமெரிக்க டாலராகப் (S$965 மில்லியன்) பதிவானது.

கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மரினா பே சேண்ட்ஸ் 406 மில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டியது.

மரினா பே சேண்ட்சின் ஹோட்டலை மேம்படுத்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டது.

மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் புதிய ஹோட்டல் அறைகள் கட்டப்பட்டன.

மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பிறகு வருமானம் கூடியுள்ளதாக மரினா பே சேண்ட்சின் உரிமையாளரான லாஸ் வேகஸ் சேண்ட்ஸ் கூறியது.

“அண்மையில் செய்த முதலீடுகளுக்கான பலன்கள் கிடைத்துவிட்ட நிலையில், மக்காவ்விலும் சிங்கப்பூரிலும் எங்கள் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று லாஸ் வேகஸ் சேண்ட்சின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ராபர்ட் ஜி. ஜோல்ட்ஸ்டைன் தெரிவித்தார்.

மரினா பே சேண்ட்சில் உள்ள சூதாட்டக் கூடத்தின் வருமானம் ஆண்டு அடிப்படையில் 35 விழுக்காடு அதிகரித்து 905 மில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

அதன் ஹோட்டலின் வருமானம் ஆண்டு அடிப்படையில் 23 விழுக்காடு உயர்ந்து 154 மில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்