மரினா பே சேண்ட்ஸ் $10 பில்லியன் கடன் வாங்கவுள்ளதாகத் தகவல்

மரினா பே சேண்ட்ஸ் $10 பில்லியன் கடன் வாங்கவுள்ளதாகத் தகவல்

1 mins read
64bd785c-86e0-40f7-beee-a58835b45d57
மரினா பே சேண்ட்ஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனது ஹோட்டலையும் பொழுதுபோக்குத் தொழிலையும் விரிவுபடுத்துவதற்காக மரினா பே சேண்ட்ஸ் நிர்வாகம் வங்கிகளிடம் $10 பில்லியன் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லாஸ் வேகாஸ் சேண்ட்சுக்கு சொந்தமான உல்லாசத் தளமான மரினா பே சேண்ட்ஸ் அடுத்த காலாண்டில் வங்கிகளிடம் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்துவது, புதிதாகக் கடன் வாங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஆனால், இதனை லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் மறுத்துள்ளது.

“நாங்கள் சந்தைப்படுத்தவோ அல்லது $10 பில்லியன் பணம் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கவோ திட்டமிடவில்லை,” என அந்நிறுவனத்தின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறையின் மூத்த துணைத் தலைவர் ரான் ரீஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்