மரினா கடற்கரை விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) நடந்த சாலை விபத்தில் 57 வயது மோட்டர்சைக்கிளோட்டி மாண்டார்.
ஆயர் ராஜா விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் மரினா கடற்கரை விரைவுச்சாலையில் லாரியும் மோட்டர்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்து குறித்து தங்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்தது எனக் காவல்துறையினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) கூறினர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டர்சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது சுயநினைவின்றி இருந்ததாகவும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.
35 வயது லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
மேக்ஸ்வெல் சாலை வெளியேறும் சாலை வழிக்குப் பிறகு வரும் விரைவுச்சாலையின் இரண்டாவது முதல் ஐந்தாவது வழித்தடங்களைப் பயன்படுத்த வேண்டாம் என வாகனமோட்டிகளை நிலப்போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி, 1.18 மணிக்குத் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தலப் பக்கத்தின் மூலம் அறிவுறுத்தியது.