மக்களுக்கு ஆபத்து என்பதால் முதலை கொல்லப்பட்டது: டான் கியட் ஹாவ்

மக்களுக்கு ஆபத்து என்பதால் முதலை கொல்லப்பட்டது: டான் கியட் ஹாவ்

1 mins read
c0139fa9-f552-4ba9-b6c7-6b90ac260cc5
அக்டோபரில் மரினா ஈஸ்ட் டிரைவ் அருகே பெரிய முதலை ஒன்று காணப்பட்டது. - படம்: சிகே லீ/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பொதுமக்கள் பாதுகாப்புக்குக் கணிசமான ஆபத்து இருந்ததால், அக்டோபரில் மரினா ஈஸ்ட் டிரைவ் அருகே காணப்பட்ட பெரிய முதலை ஒன்று கொல்லப்பட்டது.

அது பிரபலமான ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டதாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கு நீந்திச் செல்ல அந்த முதலைக்கு ஏறக்குறைய 10 நிமிடங்கள் எடுக்கும் என்றார் அவர்.

ஒவ்வோர் ஆண்டும் 7.5 மில்லியன் பேர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்குச் செல்வதால், பொதுமக்கள் பாதுகாப்புக்கு அது கணிசமான அளவு ஆபத்து விளைவித்ததாகத் திரு டான் கூறினார்.

தேசியா பூங்காக் கழகம் நகர்ப்புற வனவிலங்குகளைச் சமாளிப்பதற்கான அதன் உத்திகள் குறித்தும், வெவ்வேறு விலங்குகளைக் கையாளும்போது அது கவனத்தில் எடுத்துக்கொள்ளும் அம்சங்கள் பற்றியும் எவ்வாறு முடிவெடுக்கிறது என்று அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நாடியா அகமது சம்டின் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்
கடற்கரைகொலை