தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்சரிக்கைக் காணொளி: தடுப்புத் தூணை மரினா ஸ்குவேர் அகற்றியது

1 mins read
4c14b610-5102-49d5-90cb-92d9c29c09e6
தூணைத் தள்ளும்போது தரைப் பகுதி திறப்பதை காணொளி காட்டியது. - படம்: ஜே ஸ்ங்/ஃபேஸ்புக்

மரினா ஸ்குவேர் கடைத்தொகுதி மின்படிக்கட்டின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிறிய தடுப்புத் தூண் அகற்றப்பட்டு உள்ளது.

அந்தத் தூணை லேசாகத் தள்ளும்போது அதனுடன் இணைந்த உலோகப் தரைப் பகுதி திறப்பதால், மின்படிக்கட்டில் ஏற வருவோர் அதனுள் விழும் சாத்தியம் இருப்பதாகக் கூறி காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

அதனை அறிந்த மரினா ஸ்குவேர் நிர்வாகம், உலோகத் தூணை அகற்றிவிட்டது.

ஃபேஸ்புக்கில் நவம்பர் 27ஆம் தேதி ஜே ஸ்ங் என்பவர் அந்தக் காணொளியைப் பதிவேற்றி இருந்தார்.

ஆபத்தாகத் தோன்றுவதால் மின்படிக்கட்டு இயக்கத்தை நிறுத்திவிட்டு அதனைப் பயன்படுத்தாத வகையில் தடுப்பு அமைக்குமாறும் மரினா ஸ்குவேர் வளாகத்தின் மற்ற மின்படிக்கட்டு அமைப்புகளிலும் இதுபோன்ற ஆபத்து இருக்கிறதா என சோதித்து அறியுமாறும் அங்கிருந்த பாதுகாவலரை தாம் கேட்டுக்கொண்டதாக ஸ்ங் கூறி இருந்தார்.

நவம்பர் 29ஆம் தேதி மரினா ஸ்குவேர் கடைத்தொகுதிக்குத் தாம் சென்றபோது மின்படிக்கட்டின் முன்னால் இருந்த தடுப்புத் தூண் காணப்படவில்லை என்று ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த பெண்மணி ஒருவர் கூறினார்.

காணொளியில் வெளியான தகவல் குறித்து கட்டட, கட்டுமான ஆணையத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வினவியது.

சம்பந்தப்பட்ட தடுப்புத் தூண் காந்தசக்தி உடையது என்றும் வளாகம் முழுவதும் அதுபோன்ற தூண்களை அகற்றுமாறும் மரினா ஸ்குவேர் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஆணையம் பதிலளித்தது.

குறிப்புச் சொற்கள்