மரின் பரேட் இடைவழிப் பேருந்துச் சேவையில் வாரம் 1,000 பயணிகள்

மரின் பரேட் இடைவழிப் பேருந்துச் சேவையில் வாரம் 1,000 பயணிகள்

1 mins read
0202504a-95b8-4297-a57c-463ff5d5b556
மரின் பரேட் குழுமத்தில் ஏழு இடைவழிப் பேருந்துப் பாதைகள் வாரநாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை சேவையாற்றுகின்றன. அந்தப் பேருந்துகளை வழிநடத்துபவர்களால் அவை நிர்வகிக்கப்படுகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மரின் பரேட் குழுத்தொகுதி, மெக்பர்சன், மவுண்ட்பேட்டன் ஆகியவற்றில் உள்ள குடியிருப்பாளர்களுக்கான இலவச இடைவழிப் பேருந்துச் சேவையை, கடந்த மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 1,000 குடியிருப்பாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

ஓராண்டுக்குச் செயல்பட அந்த இலவசச் சேவைக்கு ஏறக்குறைய $1 மில்லியன் செலவாகிறது. தென்கிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம், ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் $200,000 மானியத்துடன் அந்த முன்னோடித் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த ஓராண்டு சோதனைத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தச் செலவு, ஒவ்வொரு பாதைக்கும் கிட்டத்தட்ட $150,000ஆக உள்ளது.

நான்கு எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைவழிப் பேருந்துச் சேவை குறித்து எழுப்பிய கேள்விகளுக்குத் திரு டான் பதில் அளித்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்