சிங்கப்பூர் நாணயக் கொள்கையில் மாற்றமில்லை: நாணய ஆணையம்

1 mins read
4ababe44-2376-4e7f-976b-26d3aebf3c67
2024ல், ஒட்டுமொத்த பணவீக்கம் அதிக வேகத்தில் தணியும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையின் நிலைப்பாட்டில் மாற்றம் செய்யவில்லை. இன்னமும் உயர்ந்திருக்கும் பணவீக்கத்தைச் சமாளிக்க சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.

தனியார் போக்குவரத்து, தங்குமிடச் செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்காத மூலாதாரப் பணவீக்கம் உயர்ந்துள்ளபோதும், இவ்வாண்டு ஒட்டுமொத்த பணவீக்கம் அதிக வேகத்தில் தணியும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் எதிர்பார்க்கிறது.

இவ்வாண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் 2.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று அது முன்னுரைத்துள்ளது. முன்னதாக அது 3 விழுக்காட்டுக்கும் 4 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 2024ஆம் ஆண்டுக்கான அதன் மூலாதாரப் பணவீக்க முன்னுரைப்பில் ஆணையம் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது சராசரியாக 2.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடையே இருக்கும் என்று ஆணையம் முன்னுரைத்தது.

வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் கடந்த நவம்பரிலிருந்து சரிந்துவருவதாலும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வாகன உரிமைச் சான்றிதழ்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாலும், 2024இல் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைவாக இருக்கும் என்று இப்போது முன்னுரைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்