விவாகரத்து நடவடிக்கையின் போது சிக்கலை எதிர்நோக்கும் மசே நிதி

விவாகரத்து நடவடிக்கையின் போது சிக்கலை எதிர்நோக்கும் மசே நிதி

1 mins read
c7da4797-c249-44ab-b6f1-e470812c2e83
விவாகரத்து வழக்கு நடக்கும்போதுவங்கியில் உள்ள பணம், சொத்து போலவே மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள சேமிப்பிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று வாதம் எழுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தம்பதிக்கு இடையே விவாகரத்து வழக்கு நடக்கும்போது மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள பணம் தொடர்பாகவும் பிரச்சினை வருகிறது.

வங்கியில் உள்ள பணம், சொத்து போலவே மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள சேமிப்பிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று வாதம் எழுகிறது.

குறிப்பாகப் பெரிய அளவில் மத்திய சேம நிதிக் கணக்கில் நிதி வைத்திருப்பவர்கள் விவாகரத்தின்போது தன்னுடைய சேமிப்பு நிதியை மனைவியிடம் இருந்து மறைக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் ஓர் ஆடவர் விவாகரத்து நடைமுறையின்போது தனது மத்திய சேம நிதிக் கணக்கில் $624,000 வைத்திருந்தார். அப்போது அவரது முன்னாள் மனைவி அந்த நிதியிலிருந்து $253,000 கேட்டார்.

அதை அந்த ஆடவர் மறுத்தார். திருமணத்திற்கு முன்னர் 12 ஆண்டுகள் சேமித்த தொகை அது என்று அவர் கூறினார்.

அதையடுத்து நீதிபதி இருவருக்கும் திருமணப் பந்தம் தொடங்கியதிலிருந்து சேமிக்கப்பட்ட $371,000 தொகையில் மட்டுமே பங்கு வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.

தம்பதி மசே நிதி மூலம் வாங்கிய வீட்டை விவாகரத்திற்குப் பிறகு விற்றால், மசே நிதி கணக்கில் வீடு வாங்கப் பயன்படுத்திய தொகையைச் செலுத்த வேண்டும்.

அதேபோல் திருமணம் ஆன பிறகு மசே நிதியில் சேர்க்கும் சேமிப்பில் இருவருக்கும் பங்குண்டு. விவாகரத்திற்குப் பிறகு மசே நிதிக்கான பயனாளிகள் குறித்த தகவலைப் புதுப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்
மத்திய சேம நிதிவிவாகரத்துதம்பதி