தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாசிர் ரிஸ் நிகழ்ச்சிக்கு வந்த மசெக புதுமுகம்

1 mins read
bd3596e1-20c4-47d1-99f0-d7c3453a7b4b
பாசிர் ரிஸ் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த (இடமிருந்து) குமாரி வெலரி லீ, திரு ‌‌ஷாரில் தாஹா, குமாரி இயோ வன் லிங், மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென், திருவாட்டி சுன் ‌ஷுவெ லிங், திரு டெஸ்மண்ட் டான். - படம்: ‌ஷின்டாரோ டே

மக்கள் செயல் கட்சியைப் பிரநிதித்து புதிய பாசிர்-ரிஸ் சாங்கி குழுத்தொகுதியில் குமாரி வேலரி லீ நை யீ புதுமுகமாகக் களமிறங்கக்கூடும் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

டௌடவுன் ஈஸ்ட்டில் (மார்ச் 22) நடைபெற்ற வேலைச் சந்தைக் கண்காட்சிக்கு அவர் சென்றிருந்தார்.

பாசிர் ரிஸ் சென்ட்ரல் தொகுதியை வழிநடத்தும் பிரதமர் அலுவலக மூத்த துணையமைச்சர் டெஸ்மண்ட் டான், புதிதாக தொடங்கப்பட்ட பாசிர் ரிஸ் - பொங்கோல் வாழ்க்கைத்தொழில் சந்தை கண்காட்சிக்குத் தமது குழுவின் அழைப்பை ஏற்று குமாரி லீ வந்ததாகக் கூறினார்.

இறுதிமுடிவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவிப்பார் என்றபோதும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட புதிய பாசிர் ரிஸ்- சாங்கி குழுத்தொகுதியில் தற்போது மூன்று உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்று திரு டான் குறிப்பிட்டார்.

எனவே இயல்பாக ஒருவர் புதுமுகமாக இருப்பார் என்றார் அவர். அதேபோல பொங்கோல் குழுத்தொகுதியிலும் அவ்வப்போது வெவ்வேறு மக்களை அழைப்பதுண்டு என்று திரு டெஸ்மண்ட் கூறினார்.

செம்ப்கார்ப் நிறுவனத்தின் சிங்கப்பூர், தென் கிழக்காசிய நிர்வாகப் பிரிவுத் தலைவரான குமாரி லீ இதற்கு முன் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியிலும் காணப்பட்டார்.

நடப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பாளர்களிடம் குமாரி லீயை அறிமுகம் செய்துவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பொதுத் தேர்தல் 2025நாடாளுமன்ற உறுப்பினர்தேர்தல்