தைத்திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது பொங்கல் வாழ்த்துகளை மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஃபேஸ்புக் பதிவின் மூலம் திங்கட்கிழமை, ஜனவரி 13ஆம் தேதி தெரிவித்துக்கொண்டார்.
‘பொங்கலோ பொங்கல்’ என்று தமிழில் வாழ்த்து கூறியவாறு தமது பதிவைத் தொடங்கினார் அவர்.
உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் நன்னாள் குறித்து ஒரு சிறு விளக்கம் அளித்ததுடன், அனைவரிடத்திலும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் பொங்கட்டும் என்று வாழ்த்தியும் இருந்தார் திரு லீ.
பொங்கல் குறித்தும் அதன் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் https://pongal.sg/our-events/ என்ற இணைப்பில் அறிந்துகொள்ளலாம் என்று தமது பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.