தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெக்டோனல்ட்ஸ் ஆட்குறைப்பு: சிங்கப்பூரில் தாக்கமில்லை

1 mins read
385c53df-ab99-42ae-912c-7c77ed05ce31
சிங்கப்பூரில் தற்போது 140க்கும் மேற்பட்ட மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமெரிக்காவில் மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் ஆட்குறைப்பு இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் அதன் நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் மெக்டோனல்ட்ஸ் உணவகக் கிளைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்நிறுவனத்தின் நேரடி ஊழியர்கள் அல்லர்.

சிங்கப்பூரில் செயல்படும் மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் அந்த நிறுவனத்திற்கு நேரடியாகச் சொந்தமானவை அல்ல. 'ஹான்பாவ்பாவ்' என்ற உள்ளூர் நிறுவனம் அவற்றை ஏற்று நடத்துகிறது. அந்த நிறுவனம்தான் தொழிலை மேற்பார்வையிடுகிறது. 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை அதுவே கவனித்துக்கொள்கிறது.

ஆகையால், அமெரிக்காவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படும் ஆட்குறைப்பு காரணமாக உள்ளூர் ஊழியர் சந்தையில் நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்று ஹான்பாவ்பாவ் பேச்சாளர் கூறினார்.

சிங்கப்பூரில் தற்போது 140க்கும் மேற்பட்ட மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் உள்ளன.