மெக்டோனல்ட்ஸ் விரைவு உணவகம் அதன் முதல் மெக்ஸ்பைசி அரும்பொருளகத்தைத் திறக்க இருக்கிறது.
இந்த அரும்பொருளகம் பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்துக்குப் பக்கத்தில் உள்ள திறந்தவெளியில் செவ்வாய்க்கிழமை (மே 13) திறக்கப்படுகிறது.
மே மாதம் 25ஆம் தேதி வரை இயங்கும் இந்த அரும்பொருளகம் காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அனுமதி இலவசம்.
மெக்டோனல்ட்சின் மெக்ஸ்பைசி பர்கர்கள் சிங்கப்பூரில் 1999ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
உள்ளூரில் பிரபலமாக இருக்கும் மெக்ஸ்பைசி பர்கரின் வரலாறு பற்றி அரும்பொருளகத்தில் தெரிந்துகொள்ளலாம்.
அரும்பொருளகத்தில் இருவழித் தொடர்பு அம்சங்கள் உள்ளன.
வருகையாளர்களுக்காகக் கண்காட்சிகள், விளையாட்டுகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுக்கு இலவசப் பொருள்களும் வழங்கப்படும்.
ஒவ்வொரு நாளும் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை அரும்பொருளகத்துக்குச் செல்லும் முதல் 50 பேருக்கு இலவச மெக்ஸ்பைசி பர்கர் வழங்கப்படும்.