சிறுமி மேகன் காங் மரணம் குறித்த அறிக்கை, மோசடியாளர்களுக்குப் பிரம்படி விதிக்கப்படுதற்கான மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) கூடுகிறது.
இணைய மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க உருவாக்கப்படும் அரசாங்க அமைப்பு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசப்படவுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, இணையத் துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட மசோதாவில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
18 வயதுக்குக் குறைந்தவர்கள் இணையத் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பாக இருக்கச் சில நடைமுறைகள் வேண்டும் என்று அது கூறியுள்ளது.
மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேகன் காங் மரணம் குறித்த அறிக்கை தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயரும் அதன் தொடர்பில் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

