பொதுமக்கள் தானியங்கி வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியும்

பொதுமக்கள் தானியங்கி வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியும்

1 mins read
0c9a9e7e-d1cd-4a0b-8e11-8601bf3bf223
தானியங்கி வாகனம். - படம்: சாவ் பாவ்

வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து பொதுமக்கள் தானியங்கி வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியும்.

ஆர்வமுள்ளவர்கள் அப்பயணங்களுக்கு பதிவு செய்துகொள்ளலாம் என்று போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.

அப்பயணங்கள் குறிப்பிட்ட காலகட்டம்வரை இலவசமாக இருக்கும். இதன் மூலம் அதிகமான மக்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்க்கவும் சேவை வழங்குநர் தனது சேவையை மேம்படுத்திக்கொள்வதற்குத் தேவையான கருத்துகளைத் தெரிவிக்கவும் முடியும்.

இந்தப் பயணங்களுக்குப் பதிவுசெய்வது எப்படி என்பது குறித்த கூடுதல் விவரங்களைச் சேவை வழங்குநரான கிராப் நிறுவனம் வெளியிடும் என்று புதன்கிழமை (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திருவாட்டி சுன் சொன்னார்.

இவ்வாண்டு நடுப்பகுதியிலிருந்து பயணிகள், ஒருவருக்கு $4 என்ற நிலையான கட்டணத்தில் வழித்தடங்கள் 1, 3ல் உள்ள எந்தவொரு நிறுத்தத்திலும் ஏறவோ இறங்கவோ முடியும்.

மார்ச் 25ஆம் தேதிமுதல் பொதுமக்கள் வழித்தடங்கள் 1, 3ல் பயணம் செய்ய இணையம் வழியாகப் பதிவு செய்ய முடியும்.

குறிப்புச் சொற்கள்