மலாய்/முஸ்லிம் சமூக மேம்பாட்டு அமைப்பான மெண்டாக்கி, தனது துணைப்பாட வகுப்புத் திட்டத்தை மேம்படுத்தியுள்ளது.
மாணவர்களின் ஒட்டுமொத்த சுயமேம்பாடு, கல்வி, வாழ்க்கைத்தொழில் தெரிவுகளைப் பற்றிய விழிப்புணர்வு என இரண்டு புதிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இது பற்றிய விவரங்கள் சிலவற்றை வெளியிட்டார்.
இத்திட்டம், ‘மெண்டாக்கி சாதனைத் திட்டம்’ என மேம்படுத்தப்பட்டுள்ளது.
மெண்டாக்கி, ஒவ்வொரு மாதத்தின் நான்காவது வகுப்பிலும் செறிவூட்டல் அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யும் என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
அத்துடன், மார்ச், ஜூன், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் ஈடுபாட்டு அங்கங்களும் நடத்தப்படும்.
புதிதாக, மெண்டாக்கிக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே ‘மெண்டாக்கி - பள்ளிகள் பங்காளித்துவம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆதரவைப் பெற்றிருப்பதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“இதன்படி, மெண்டாக்கி கேர் ஆலோசகர்கள் சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினர், பள்ளிகள், சமூகச் சேவை நிபுணர்கள் ஆகியோருடன் இணைந்து சேவையாற்றுவர்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, 16 வயதுக்குக் குறைவான வயதுடைய பிள்ளைகளின் ஆங்கிலம், மலாய், கணித மொழிக் கற்றலில் பெற்றோரையும் ஈடுபடுத்தி வளமளிக்கும் ‘ரெடி, செட், லர்ன்’ திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகளின் பலனை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களையும் மெண்டாக்கி அறிமுகம் செய்யும்.
இவற்றுடன், மெண்டாக்கி தனது வழிகாட்டித் திட்டத்தையும் விரிவுபடுத்தவுள்ளது.

