ஸிம்பாப்வே, சமூகத்தில் மனநலச் சுகாதார உதவி வழங்கும் மூத்த தொண்டூழியர்களுடன் மனநலச் சுகாதாரத் திட்டம் ஒன்றைத் தொடங்கியது.
அந்தத் திட்டம், மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் நியூயார்க் உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது.
அதில் முக்கிய சுகாதாரப் பராமரிப்பு மருந்தகங்கள் அல்லது பாதுகாப்பான சமூக இடங்களுக்கு அருகில் அமைந்திருக்கும் ‘மரத்தாலான ‘பிரண்ட்ஷிப் பென்ச்’ல் அமர்ந்துகொண்டு, சமூகச் சுகாதார ஊழியர்கள் பொதுவான மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்குவர்.
மனநலச் சுகாதாரப் புத்தாக்கக் கட்டமைப்பின் ஆசிய நடுவம் சிங்கப்பூரில் இவ்வாண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்டது.
சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் பயன்படுத்தப்படக்கூடிய உத்தேசத் தீர்வுகளில் ஒன்றாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அந்த ஸிம்பாப்வே திட்டம் குறிப்பிடப்பட்டது.
மனநலச் சுகாதாரப் புத்தாக்கக் கட்டமைப்பை, லண்டன் தூய்மை, மருந்தகப் பள்ளியும் உலக சுகாதார நிறுவனமும் பத்தாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கின.
அதன் பின்னர், வட்டார நடுவங்கள் ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, கரீபிய நாடுகள், ஆசியா ஆகியவற்றில் நிறுவப்பட்டன.
சிங்ஹெல்த் டியுக் - சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக உலக சுகாதாரக் கல்விக்கழகம் வழிநடத்தும் அந்த ஆசிய நடுவம், சிங்கப்பூரில் தளம்கொண்ட ‘முசிம் மாஸ்’ எனும் இந்தோனீசிய செம்பனை எண்ணெய்க் குழுமம் வழங்கிய நிதி ஆதரவுடன் நிறுவப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மனநலச் சுகாதாரத்தின் தொடர்பில், நாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்துக்கும் கற்றலுக்கும் அது வகைசெய்யும்.
வட்டாரத் திட்டம் ஒன்றின் மூலம், எதிர்கால சுகாதாரப் பராமரிப்புத் தலைவர்களை உருவாக்கவும் ஆசிய நடுவத்தை அமைக்கவும், ‘முசிம் மாஸ்’ சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு $1 மில்லியன் நன்கொடை வழங்கியது.
சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய பல்வேறு முயற்சிகளுக்குத் தனது நன்கொடை பயன்படுத்தப்படவேண்டும் என்று ‘முசிம் மாஸ்’ கூறியது.
இந்நிலையில், ஆசியாவின் மனநலச் சுகாதாரப் புத்தாக்கக் கட்டமைப்பில் பகிர்ந்துகொள்ளக்கூடிய மற்ற சுகாதாரத் திட்டங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலிருந்து பெறப்படும் மனநலச் சுகாதார முறைகளும் தீர்வுகளும், உலக அளவில் கணிசமான அளவு பிரதிநிதிக்கப்படுவதில்லை.
அந்த வட்டாரத்தில் உள்ள பல நாடுகள் தொடர்ந்து சவால்களைச் சந்திப்பதாக சிங்ஹெல்த் டியுக் - சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக உலக சுகாதாரக் கல்விக்கழகத்தின் இயக்குநர் டான் ஹியாங் கூன் கூறினார்.
ஆசியாவின் மனநலச் சுகாதாரப் புத்தாக்கக் கட்டமைப்பு போன்ற தளங்கள், மனநலச் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்த உலகக் கலந்துரையாடலில் ஆசியாவின் நிலையை உயர்த்துவதில் மிக முக்கியமானவை என்றார் அவர்.
‘ஆசியாவில் உலக மனநலச் சுகாதாரக் கருத்தரங்கு 2025’ அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை நடைபெறும்போது, ஆசியாவின் மனநலச் சுகாதாரப் புத்தாக்கக் கட்டமைப்பு சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.