சிங்கப்பூரில் பெரியவர்களிடையே மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணத்தைக் கண்டறிய ஐந்தாண்டு ஆய்வை மனநலக் கழகம் தொடங்கியுள்ளது.
சிகிச்சையை மேம்படுத்தவும் மனஅழுத்த பாதிப்பைத் தடுக்கவும் வழிவகைகளைக் கண்டுபிடிப்பதே ஆய்வின் இலக்கு.
ஏறத்தாழ 3,200 சிங்கப்பூர்வாசிகள் ஆய்வில் பங்கெடுப்பர்.
அவர்கள் 18 வயதுக்கும் 75 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
காலப்போக்கில் மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் தீவிரமும் எவ்வாறு மாறுகின்றன என்பது கண்காணிக்கப்படும்.
ஆய்வில் பங்கெடுப்பவர்களில் 1,299 பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்.
அதே எண்ணிக்கையைக் கொண்ட குழு ஒன்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
அதில் இடம்பெறுபவர்களுக்கு மனஅழுத்தம் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
743 பேருக்கு இலேசான மனஅழுத்தம் உள்ளது.
இலேசான மனஅழுத்தத்துக்கு முறையான சிகிச்சை பெறாவிட்டால் அது மோசமடையும் அபாயம் இருக்கிறது.
மனஅழுத்தம் காலப்போக்கில் மாறுவது எவ்வாறு மோசமடைகிறது என்பதை கண்காணிக்கும் ஆய்வு சிங்கப்பூரில், சிங்கப்பூர்வாசிகளைக் கொண்டு நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
மனஅழுத்தம் மோசமடைய வாழ்க்கையில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் எவ்வாறு காரணமாக இருக்கின்றன என்பதை ஆய்வு கண்காணிக்கும் என்று ஆய்வுக்குத் தலைமை தாங்குபவரும் மனநலக் கழகத்தின் மருத்துவ வாரியத்தின் (ஆய்வு) உதவித் தலைவருமான இணைப் பேராசிரியர் மைதிலி சுப்ரமணியம் செவ்வாய்க்கிழமை (மே 20) தெரிவித்தார்.
வயது, பாலினம், மீள்திறன், வாழ்க்கை முறை, குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவு போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மனஅழுத்தத்தால் எளிதில் பாதிப்படையக்கூடிய பிரிவினர்களை அடையாளம் காண இந்த ஆய்வு உதவும் . நிலைமை மோசமடைவதற்கு முன்பு சிகிச்சை அளிக்க இது வாய்ப்பு தரும்,” என்றார் இணைப் பேராசிரியர் மைதிலி.

