தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவு, பானத்துறையில் விரயத்தைக் குறைக்க வழிகாட்டிப் புத்தகம் வெளியீடு

2 mins read
9cdd41d0-4439-4cce-ab33-8601e4b54899
‘பிளேபுக்’ வழிகாட்டிப் புத்தகத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தொடங்கி வெளியிட்டார். - படம்: எஸ்பிஎச் மீடியா

உணவு விரயம் மற்றும் பொட்டல விரயங்களைக் (packaging waste) குறைக்கவும் வளப் பயன்பாட்டை அதிகரிக்கவும் உணவு, பானத் துறைக்கு உதவும் நீடித்த நிலைத்தன்மைக்கான புதிய விவரப் புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது.

விரயங்களைக் குறைக்கவும் வளங்களைப் பெருக்கவும் தேவைப்படும் விவரங்களை உணவு, பானத் துறை நிறுவனங்கள் அந்தப் புத்தகத்தில் தெரிந்துகொள்ளலாம்.

‘எஃப் அண்ட் பி சொலுயூஷன்ஸ் புரோவைடர்ஸ்’ எனப்படும் உணவு, பானத் துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் அமைப்புடன் கலந்து ஆலோசித்த பின்னர் அந்த வழிகாட்டிப் புத்தகத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் (EnterpriseSG) அமைப்பு உருவாக்கியது.

‘பிளேபுக்’ எனப்படும் அந்த வழிகாட்டிப் புத்தகத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தொடங்கி வெளியிட்டார்.

முக்கியமான மூன்று அம்சங்களில் நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை கூடுதலாகப் பெற அந்த வழிகாட்டிப் புத்தகம் படிப்படியாகச் சொல்லித்தரும்.

உணவு விரயம், பொட்டல விரயம், கரியமில வாயு வெளியேற்றம் போன்றவை அந்த மூன்று அம்சங்கள்.

சுற்றுச்சூழலிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாக இவை அடையாளம் காணப்பட்டு உள்ளதாக ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ தெரிவித்து உள்ளது.

தற்போதைய நிலையில் உணவு விரயமே உணவு, பானத்துறையின் ஆக அழுத்தம் தரக்கூடிய அம்சமாக உள்ளதென்றும் அது கூறியது.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 755,000 டன் உணவு விரயமானது. அதன் எடை 52,000 ஈரடுக்குப் பேருந்துகளின் எடைக்குச் சமம்.

வழிகாட்டிப் புத்தக வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஃபூ, வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலமும் விரயங்களைக் குறைப்பதன் மூலமும் உணவு, பானத் துறையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்