சிங்கப்பூர் வானத்தை ஒளிரவைக்கும் விண்கற்கள்

1 mins read
328560d6-8a3f-44a2-90bf-275e0ba578ba
சாதகமான சூழலில் ஒரு மணி நேரத்தில் 100 விண்கற்கள் வரை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இரவு வானத்தில் இரண்டு முறை விண்கற்கள் தடங்களைப் பதிக்கவிருக்கின்றன.

வானிலை ஒத்துழைத்தால் அந்த அரிய காட்சியை அடுத்த சில வாரங்களில் காணலாம் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் விண்வெளி ஆய்வகம் குறிப்பிட்டது.

டெல்ட்டா அகுவாரிட்ஸ், பெர்செய்ட்ஸ் ஆகிய விண்கற்கள் அடுத்த சில வாரங்களில் கண்களுக்குத் தென்படவிருக்கின்றன.

விண்கல் 96பி மெச்சோல்சிலிருந்து தோன்றும் டெல்டா அகுவாரிட்ஸ், ஜூலை 30ல் உச்சம் தொடும். கும்பம் என்ற விண்மீன் குழாமிலிருந்து அவை ஒளிர்ந்து காணப்படும்.

1986ல் அமெரிக்க பொழுதுபோக்கு ஆய்வாளர் டோனல்ட் மெச்சோல்ஸ், அந்த விண்கல்லைக் கண்டுபிடித்தார்.

பெர்செய்ட்ஸ் விண்கற்கள், துடிப்புக்காகவும் ஜொலிக்கும் தோற்றத்திற்காகவும் பெயர்பெற்றவை. அவை ஒளிமிகு பாதையை விட்டுச் செல்கின்றன.

நல்லச் சூழலில் ஒரு மணி நேரத்தில் 100 விண்கற்கள் வரைக் காண முடியுமென்று எதிபார்க்கப்படுகிறது.

ஆனால், அந்நேரத்தில் முழுமை அடையவிருக்கும் நிலவு ஒளி வீசுவதால் பெர்டெய்ஸ் விண்கற்களைப் பார்க்கமுடியாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. 

குறிப்புச் சொற்கள்