பல துறைமுகப் பயிற்சிப் பயணமான ‘ட்ரிகாண்டினெண்டல் 2024’ன் ஒரு பகுதியாக, மெக்சிகோ கடற்படைக் கப்பல் சிங்கப்பூரின் விவோசிட்டிக்கு வந்துசேர்ந்து உள்ளது.
‘குவாதெமொக்’ என்று அழைக்கப்படும் அந்த உயரமான கப்பல், ஆகஸ்ட் 27ஆம் தேதிவரை இங்கு இருக்கும்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, தஹித்தி போன்ற நாடுகளில் உள்ள 14 துறைமுகங்களுக்கு அது செல்லவிருக்கிறது.
மெக்சிகோ கடற்படையுடன் அந்தக் கப்பல் கொண்டுள்ள 42 ஆண்டுகால வரலாற்றில், ஆக அண்மையானது இந்தப் பயிற்சிப் பயணம்.
இதுவரை அக்கப்பல் 756,000க்கும் அதிகமான கடல்மைல்கள் தொலைவு பயணம் செய்துள்ளது.
‘குவாதெமொக்’ ஆகஸ்ட் 22ஆம் தேதி சிங்கப்பூர் வந்தடைந்தது.
பொதுமக்கள் இலவசமாக அருகிலிருந்தே ஆகஸ்ட் 24, 25, 26ஆம் தேதிகளில், காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை கப்பலைக் காணலாம்.
அந்தக் கப்பல் ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை பத்து மணிக்கு இங்கிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

