தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறப்பு தேவையுடைய பராமரிப்பாளர்களுக்கு நிதி திட்டமிடுதல் குறித்த பாடத்திட்டம்: மைண்ட்ஸ்

1 mins read
096740bb-a4a6-4993-85fa-2b563dc13e2c
தாம் உருவாக்கிய கலைப்படைப்புடன் திரு நைஜல் சூ. - படம்: சூ குடும்பத்தார்

சிறப்புத் தேவையுடைய பிள்ளையைக் கொண்டுள்ள திரு சூவும், திருமதி சூவும் வாழ்க்கைத் திட்டங்கள் குறித்து சில வழிகாட்டுதலைப் பெறவிருக்கின்றனர். அவர்கள் இருவரும் தங்களின் எழுபதுகளில் உள்ளனர்.

அறிவுசார் குறைபாடுகள் உள்ள தங்களின் 43 வயதான திரு நைஜல் சூக்கு இன்னும் பராமரிப்பு தேவைப்படுகிறது.

தற்போது 73 வயது திரு சூ, திரு நைஜல் சூக்கு வீடு தேட தொடங்கியுள்ளார்.

வாழ்க்கைத் திட்டங்கள், வசிக்கும் ஏற்பாடுகள், ஆதரவுக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் தொடர்பில் ஆறு பாடத்திட்டங்கள் இவ்வாண்டின் பிற்பாதியில் வெளிவரும்போது, அந்தத் தம்பதியர் சில வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.

அந்தப் பாடத்திட்டங்கள் ‘மைண்ட்ஸ்’இன் ‘ஃபியூச்சர்ரெடி’ இணையவாசலின் ஒரு பகுதியாக வழங்கப்படவிருக்கின்றன.

மற்ற புதிய பாடத்திட்டங்கள், காப்பீடு, திட்டங்கள், மானியங்கள், சுகாதாரச் சேவைகள், மருத்துவப் பரிசோதனை போன்றவற்றைப் பற்றியவையாகும்.

எதிர்காலப் பராமரிப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பராமரிப்பாளர்களிடமிருந்து அதிகமான கேள்விகள் வந்ததை ‘மைண்ட்ஸ்’ உணர்ந்தது. அதன் பிறகு இந்தத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.

எளிதில் பயன்படுத்தக்கூடிய எதிர்காலப் பராமரிப்பு திட்டமிடுதல் இணையவசாலை உருவாக்க, ‘டைம்லிஸ்’ என்ற சொத்து, மரபு நிபுணத்துவ நிறுவனத்துடன் ‘மைண்ட்ஸ்’ இணைந்து செயல்பட்டது.

குறிப்புச் சொற்கள்