தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யுனிவர்சல் ஸ்டூடியோவில் 2025ல் ‘மினியன்’ கேளிக்கைப் பூங்கா

1 mins read
427bc3b2-dd7c-4e5d-856b-7ca5ccf36487
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா உல்லாசத்தளத்தில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரில் அமையும் மினியன் கேளிக்கைப் பூங்கா. - படம்: யுனிவர்சல் டெஸ்டினேஷன் & எக்ஸ்பீரியன்ஸ்

சாம்பல் நிற பெரிய முட்டைக் கண்ணாடி, நீல நிறச் சட்டை அணிந்து, குட்டைக் கைகளையும் கால்களையும் ஆட்டி சாகசம் புரியும் மஞ்சள் நிற ‘மினியன்’[Ϟ]களை விரைவில் சிங்கப்பூரில் சந்திக்கலாம்.

ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா (ஆர்டபிள்யூஎஸ்) உல்லாசத்தளத்தில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூரில் (யுஎஸ்எஸ்) அமைக்கப்படும் மினியன் கேளிக்கைப் பூங்காவில் (மினியன் லேண்ட்) பல்வேறு ‘மினியன்கள்’ இடம்பெற உள்ளன.

இந்த ‘டெஸ்பிக்கபல் மீ அண்ட் மினியன்ஸ் அனிமேஷன்’ திரைப்பட பிரபலங்களின் உலகத்தில் யுனிவர்சல் ஸ்டூடியோவின் பிரத்தியேகமான குடைராட்டினம் (கேரோசல்) உட்பட மினியன் கேளிக்கைப் பூங்காவில் பல சாகச சவாரிகள் அமைந்திருக்கும்.

சில்லறை விற்பனைக் கடைகள், உணவுக் கடைகளும் இருக்கும். மினியன் கேளிக்கைப் பூங்கா 2025ஆம் ஆண்டில் திறக்கப்படும். அதிகாரபூர்வ திறப்பு விழா தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மினியன் கேளிக்கைப் பூங்காவில், கருப்பொருள் சார்ந்து இடம்பெறும் ‘பகி போகி’ குடை ராட்டினம்.
மினியன் கேளிக்கைப் பூங்காவில், கருப்பொருள் சார்ந்து இடம்பெறும் ‘பகி போகி’ குடை ராட்டினம். - படம்: யுனிவர்சல் டெஸ்டினேஷன் & எக்ஸ்பீரியன்ஸ்

“மினியன்கள் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள். ‘டெஸ்பிக்கபல் மீ அண்ட் மினியன்ஸ் ஃபிரான்சைசஸ்’ கேலிச் சித்திரப் படத்தின் சுவாரஸ்யமான கதை அடிப்படையில் மினியன் கேளிக்கைப் பூங்கா உருவாக்கப்படும்,” என்று யுனிவர்சல் ஸ்டூடியோவின் இடங்கள், அனுபவங்கள் சார்ந்த புதிய முயற்சிகளின் தலைவரான திரு பேக் தாம்சன் குறிப்பிட்டார்.

பார்வையாளர்களை திரைப்படங்களின் உலகிற்கு அழைத்துச் செல்லும்-க்ரூஸ் பாக்கம், சூப்பர் சிலி ஃபன் லேண்ட், மினியன் மார்க்கெட் ஆகிய தனித்துவமான மூன்று பகுதிகளை மினியன் லேண்ட் கொண்டிருக்கும்

நான்கு ‘டெஸ்பிக்கபல் மீ’ (Despicable Me) திரைப்படங்களுக்குப் பிறகு,  க்ருவின் க்ரூவின் பாக்கம் (Gru’s Neighbourhood)  எப்படி இருக்கும் என்பதை நேரில் அறிந்துகொள்ளலாம்.
நான்கு ‘டெஸ்பிக்கபல் மீ’ (Despicable Me) திரைப்படங்களுக்குப் பிறகு, க்ருவின் க்ரூவின் பாக்கம் (Gru’s Neighbourhood) எப்படி இருக்கும் என்பதை நேரில் அறிந்துகொள்ளலாம். - படம்: யுனிவர்சல் டெஸ்டினேஷன் & எக்ஸ்பீரியன்ஸ்
குறிப்புச் சொற்கள்