இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்தித்து அனைத்துலக அரசியல், பொருளியல் சூழல், இவற்றால் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதித்தேன்.
“அதேபோல தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில்துறை ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூா் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஆலோசித்தேன்,” எனக் கூறினார்.
முன்னதாக, துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கையும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.