போலி ஃபேஸ்புக் பக்கம் குறித்து தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்தப் போலி ஃபேஸ்புக் பக்கம் தமது பெயரைப் பயன்படுத்துவதாக அவர் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) தெரிவித்தார்.
அது ‘ஜோசஃபின் டியோ லீ மின்’ எனும் பெயரின்கீழ் வலம் வருவதாகவும் உரையாடலில் ஈடுபட பொதுக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் டியோ கூறினார்.
அந்த ஃபேஸ்புக் பக்கம் தம்முடையதல்ல என்று அவர் உறுதிப்படுத்தினார்.
“எனது தனிப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக பொதுமக்களுக்கு நான் இதுபோன்ற அழைப்புகளை விடுப்பதில்லை என்று அவர் கூறினார்.
தமது பெயரைப் பயன்படுத்தி வலம் வரும் போலி ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்புகொள்ளாமல் அதை முடக்கிவிடும்படி பொதுமக்களை அமைச்சர் டியோ ஊக்குவித்தார்.
விசாரணை நடத்த மெட்டாவிடம் புகார் அளிக்கும்படி அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
“ஒன்றிணைந்து இணையத்தைப் பாதுகாப்பானதாக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.